info@tnfu.ac.in    04365 - 241444
"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Training programme on Value added fishery products - Parakkai KK Centre

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பறக்கையில் அமைந்துள்ள வளங்குன்றா நீர் உயிரி வளர்ப்பு மையத்தில் 08.08.2017 மற்றும் 09.08.2017 ஆகிய நாட்களில் மதிப்பூட்டிய மீன் உபபொருட்கள் தயாரிப்பு பயிற்சி நடத்தப்பட்டது.  இப்பயிற்சியில் முனைவர் சந்திராள், இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர், உயிரியல் துறை, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி, நாகர்கோயில் அவர்கள் தலைமையில் 28 கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.  இப்பயிற்சியில் மீனின் மகத்துவம் மற்றும் உடல் நலத்தில் மீனின் பங்கு பற்றி விரிவுரைகளை முனைவர் கி.ராவணேஸ்வரன், பேராசிரியர் மற்றும் தலைவர், பறக்கை மையம் அவர்கள் உரையாற்றினார்.  மீன் ஊறுகாய், மீன் பஜ்ஜி, மீன் கட்லட், மீன் சான்ட்விச் மற்றும் மீன் சூப் தயாரித்தல் பற்றிய செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.  இப்பயிற்சியின் நிறைவு விழாவிற்கு முனைவர் ஜா.ஸ்டீபன் சம்பத் குமார், இயக்குநர், வளங்குன்றா நீர் உயிரி வளர்ப்பு, தஞ்சாவூர் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி மதிப்பூட்டிய மீன் பொருட்களின் மகத்துவம் மற்றும் விற்பனை யுக்திகளை எடுத்துரைத்தார்.  இம்மையத்தில் தயாரிக்கப்பட்ட மீன் ஊறுகாய் முதல் விற்பனையை இயக்குநர் அவர்கள் துவக்கி வைத்தார். இப்பயிற்சிக்கான ஏற்பாட்டினை முனைவர் கி.ராவணேஸ்வரன், பேராசிரியர் மற்றும் தலைவர் செய்திருந்தார்.


Parakkai KK Centre for Sustainable Aquaculture, Parakkai, Nagercoil of Tamil Nadu Fisheries University conducted a training programme on Value added fishery products on 08.08.2017 and 09.08.2017.  A total of 28 students of the Women’s Christian College, Nagercoil under the leadership of Dr.Chandral attended the programme.  Dr.K. Ravaneswaran, Professor and Head, PKKCeSA delivered the importance and nutritive values of fishes.  Products like fish pickle, fish bajji, fish cutlet, fish sandwich and fish soup preparations were demonstrated.  Prof.J.Stephen Sampath Kumar, Director, Centre for Sustainable Aquaculture, Thanjavur attended and distributed the certificates during valedictory function and he emphasized the importance of value added fishery products and marketing strategies to the participants.  The sale of fish pickle prepared from this centre was inaugurated by the Director, CeSA and the first sale of fish pickle was received by Dr.Chandral, Women’s Christian College, Nagercoil.  The programme was organized by Dr.K.Ravaneswaran, Professor and Head, PKKCeSA, Parakkai.