info@tnfu.ac.in    04365 - 241444
"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் “நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பில் சிறந்த மேலாண்மை முறைகள்” பயிற்சி தொடங்கப்பட உள்ளது (04.10.2017 - 06.10.2017)

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின்  ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில்  வருகிற அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி புதன்கிழமை முதல் 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை “நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பில் சிறந்த மேலாண்மை முறைகள்” தொடர்பான மூன்று நாள் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சிக்கு கட்டணம் நபர் ஒன்றுக்கு ரு.500/- ஆகும். இப்பயிற்சியானது இக்கல்லூரியின் மீன்வள விரிவாக்கத்துறை மூலம் நடத்தப்படுகிறது.  பயிற்சியில் பல்வேறு முக்கிய நன்னீர் அலங்கார மீன் இனங்கள், முட்டை மற்றும் குட்டி ஈனும் அலங்கார மீன் இனங்களின் இனப்பெருக்கம், அலங்கார மீன்வளர்ப்பு உபகரணங்கள், அலங்கார மீன்களுக்கான உயிர் உணவுகள், நீர்த்தரக்கட்டுப்பாடு, செயற்கை உணவு தயாரித்தல், கண்ணாடித் தொட்டி அமைத்தல், நோய் மேலாண்மை, பொருளாதாரம் மற்றும் சிறந்த பண்ணை மேலாண்மை குறித்த தொழில் நுட்பங்கள் செயல்முறை விளக்கங்களோடு நடத்தப்பட உள்ளன. இப்பயிற்சி அலங்கார மீன்வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், சுயதொழிலாக இதனை ஏற்று நடத்த முனைவோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  பயிற்சியில் மூன்று நாட்களும் தவறாது கலந்து கொள்பவர்களுக்கு பயிற்சியில் கலந்துக்கொண்டதற்கான சான்றிதழும் வழங்கப்படும்.  பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவர்கள் தங்களது பெயர்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சி தொடர்பாக மேலும் விவரங்களுக்கு 9894530161, 9486606839 மற்றும் 9994450663 ஆகிய கைபேசி எண்களில் ஏதேனும் ஒன்றை தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் இப்பயிற்சியில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் தெரிவிக்கிறார்.