info@tnfu.ac.in    04365 - 241444
"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Students Research Guidance Workshop (SRGW) conducted at Fisheries College and Research Institute, Thoothukudi

A workshop on Student Research Guidance (SRGW) was conducted on 01.09.2017 at the Fisheries College and Research Institute, Thoothukudi. The postgraduate degree programmes of the Tamil Nadu Fisheries University which include M.F.Sc. in 10 disciplines and Ph.D. in 9 disciplines are primarily based on research for 2 semesters and 4 semesters respectively. The research students have to publish their research in peer-reviewed journals as a mandatory requirements for their PG programmes. A special committee has also been recently constituted at the University to promote research to result in publication, patents and further projects and to raise the standard of research that would benefit the fisheries sector. The Students Research Guidance Workshop (SRGW) focused on improving the research programmes of the postgraduate students of 2016-17 batch and to evaluate the methodology adopted for research. Dr. S. Felix, Vice Chancellor of Tamil Nadu Fisheries University inaugurated the Workshop.Dr.G.Sugumar, Dean and Coordinator of SRGW, FC&RI, Thoothukudi welcomed the gathering and elucidated the purpose of the SRGW.  A total of 28 postgraduate students of 2016-17 batch(22 M.F.Sc. and 6 Ph.D.,) from FC&RI, Thoothukudi and Ponneri presented their research programmes in the workshop. Dr.V.S. Chandrasekaran and Dr. S.K.Otta, Principal Scientistsfrom CIBA Chennai, Dr. I. Jagadis, Principal Scientist, CMFRI, Thoothukudi and Mr. Ranjith Manly. K.K. Life Sciences, Chennai and an adjunct faculty of Tamil Nadu Fisheries University participated in the workshop as External Experts and offered their valuable suggestions to improve the quality of the research work of the students in their concerned field. Dr.G.Jeyasekaran, Director of Research in-charge Dr. B.Ahilan, Dean in-charge, FC&RI, Ponneriand Dr. S.A. Shanmugam, Controller of Examinations of TNFU also participated and provided their inputs and suggestions on improving the research of the students. In the concluding remarks, the Vice Chancellor stressed the need for taking up the research topic based on current need and applied value for fisheries industries with specific requirements.Finally, the Technical Committee summarized the outcome of the workshop and with a vote of thanks the programme was concluded.

DrN.V.Sujathkumar, Professor and Head, Department of Fisheries Information and Statistics served as Organizing Secretary and made arrangements for the successful conduct of the workshop.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாணவர்களின் ஆராய்ச்சிக்கான வழிகாட்டுதல் பயிற்சிப்பட்டறை

  தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாணவர்களின் ஆராய்ச்சிக்கானவழிகாட்டுதல் பயிற்சிப்பட்டறை 01.09.2017 அன்று நடைபெற்றது. தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பட்டப்படிப்பு 10 பாடப்பிரிவுகளும், முனைவர் பட்டப்படிப்பு 8 பாடப்பிரிவுகளும் முறையே 2 மற்றும் 4 ஆகிய செமஸ்டர்களில் ஆராய்ச்சிகள் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. முதுகலை ஆராய்ச்சி மாணவர்கள் தங்களின் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை ஆராய்ச்சிகட்டுரைகளாக ஆய்வேடுகளில் பிரசுரிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும். இதற்காக தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் ஒரு சிறப்பு குழுவை அமைத்து ஆராய்ச்சி மாணவர்களின் கண்டு பிடிப்புகளை பிரசுரிக்கவும், காப்புரிமை மற்றும் தொடர் ஆராய்ச்சி திட்டங்களை வகுக்கவும், ஆராய்ச்சியின் தரத்தை உயார்த்தவும் மற்றும் மீன்வளத் துறைக்கு பயன்படும் வகையில் வழிகாட்டவும் வழிவகை செய்துள்ளது. மாணவர்களின் ஆராய்ச்சிக்கான வழிகாட்டுதல் பயிற்சிப்பட்டறையானது 2016-17ம் ஆண்டு சேர்ந்த முதுகலை மாணவர்களின் ஆராய்ச்சியினை மேம்படுத்தவும் மற்றும் ஆராய்ச்சிக்காக வகுக்கப்பட்ட முறைகளை மதிப்பிடவும் நடத்தப்பட்டது. இந்த பயிற்சிப்பட்டறையினை தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் சுக. ஃபெலிக்ஸ் அவர்கள் துவக்கி வைத்தார்கள். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோ.சுகுமார் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி இந்த பயிற்சிப்பட்டறைக்கான நோக்கத்தினை எடுத்துரைத்தார். 2016-17ம் கல்வியாண்டில் சேர்ந்த 28 முதுநிலை ஆராய்ச்சி மாணவர்கள் முறையே 22 முதுநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு மற்றும் 6 முனைவர் மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் தூத்துக்குடி மற்றும் பொன்னேரி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து கலந்து கொண்டு தங்களின் ஆராய்ச்சிக்கான திட்டங்களை எடுத்துரைத்தார்கள். இந்த பயிற்சிபட்டறையில் மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிலையத்தின் முதன்மை விஞ்ஞானிகளான முனைவர் சந்திரசேகரன் மற்றும் முனைவர் ஓட்டா ஆகியோர்கள் கலந்து கொண்டனார். மேலும் தூத்துக்குடியில் உள்ள மத்திய கடல்நீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி முனைவர் ஜெகதீஸ் அவர்களும், சென்னையில் உள்ள கே.கே.லைப் சயின்ஸ் நிறுவனத்தின் தலைவரும் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணை ஆசிரியருமான திரு.ரஞ்சித் அவர்களும் கலந்து கொண்டார்கள். இந்த விஞ்ஞானிகள் அனைவரும் மாணவர்களின் ஆராய்ச்சி குறித்து தங்களின் கருத்துகளையும் அறிவுரைகளும் வழங்கினார்கள். இந்த பயிற்சிப்பட்டறையில் தமிழ்நாடு மீன்வளப்பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்குநர்(பொ) முனைவர் ஜெயசேகரன், பொன்னேரி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் (பொ) முனைவர் ப. அகிலன் மற்றும் தமிழ்நாடுமீன்வளப் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் சீ.ஆ.சண்முகம் ஆகியோர்களும் கலந்து கொண்டு தங்களின் மேலான கருத்துகளையும் அறிவுரைகளும் வழங்கினார்கள். இந்த பயிற்சிப்பட்டறையின் முடிவில், துணைவேந்தர் அவர்கள் கூறுகையில் மாணவர்கள் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் பொழுது குறிப்பாக தற்போதைய ஆராய்ச்சிக்கான தேவை குறித்தும், ஆராய்ச்சியின் மூலம் மீன்வளத்துறைக்கு பயன்படும் வகையிலும் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இறுதியில், தொழில்நுட்பகுழுவினர் பயிற்சிப்பட்டறையில் ஆலோசிக்கப்பட்டவைகளையும், அறிவுரைகளையும், கருத்துக்களையும் சுருக்கமாக எடுத்துரைத்து நன்றியுரை ஆற்றினார்கள்.

               மீன்வளத் தகவல் மற்றும் புள்ளியியல் துறையின் தலைவர் முனைவர் சுஜாத்குமார் அவர்கள் இப்பயிற்சிப்பட்டறையின் செயலாளராக சிறப்பாக முறையில் நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்து இருந்தார்.