info@tnfu.ac.in    04365 - 241444
"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

NSS programme on ‘OPEN DEFECATION FREE CAMPAIGN’ held at Kombuthurai Village

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பாக கொம்புதுறை கிராமத்தில் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்த்தல் பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக காயல்பட்டிணம் அருகில் உள்ள கொம்புதுறை கிராமத்தில் 09.08.2017 அன்று திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்த்தல் பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்திய அரசாங்கத்தால் 01.08.2017 முதல் தொடங்கப்பட்ட“ஸ்வச்டாபக்வதா”என்ற இருவார சுகாதாரச் சிறப்பு திட்டத்தின் கீழ் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியின் முதல்வர் முனைவர் கோ.சுகுமார் அவர்களின் ஆலோசனையின் போல் கொம்புதுறை கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டு, திறந்தவெளியில் மலம் கழிப்பதற்ற கிராமமாக இதனை மாற்றுவதற்கு கிராம மக்கள் அறிவுறுத்தப்பட்டனர். கொம்புதுறை கிராமத்தில் உள்ளஅரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. பூங்கோதை அவர்களோடு சேர்ந்து மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்கள் செய்து இருந்தனர். இதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்ப்பதின் அவசியம் குறித்து நாடகம் நடித்து காட்டப்பட்டது. காயல்பட்டிணம் நகராட்சியின் சுகாதாரஆய்வாளர் திரு.பொன்வேல்ராஜ் பேசும் பொழுது கொம்புதுறை கிராம வீடுகளில் கழிப்பறை வசதிகளின் தற்போதைய நிலைகுறித்தும், புதியகழிப்பறை கட்டுவதற்கு அரசிடமிருந்து கிடைக்கப்பெறும் நிதியுதவி குறித்தும் எடுத்துரைத்தார். நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும் உள்ளுர் பள்ளி மாணவர்களும் வீதிகளில் பேரணியாக சென்று வீடு வீடாக கழிப்பறை தேவைபற்றி உணர்த்தும் துண்டுபிரசுரங்களை விநியோகித்தனர். இந்நிகழ்ச்சியின் மூலம் 110 பள்ளி மாணவர்களும் திரளான கிராமமக்களும் பயன்பெற்றனர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிநிலையத்தின் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் திரு.மு.முருகானந்தம் நிகழ்ச்சி ஒருங்கிணைத்து நடத்தினார். 

 


The NSS unit of the Fisheries College and Research Institute, Thoothukudi organized an ‘OPEN DEFECATION FREE CAMPAIGN’at Kombuthurai Village, a fishing hamlet near Kayalpattinam of Thoothukudi District on 09.08.2017. The programme was organized as part of the ‘SwatchhtaPakwada’ scheme proposed by the Government of India during the fortnight starting from 01.08.2017. As per the direction from Dr.G.Sugumar, Dean, Fisheries College & Research Institute, Thoothukudi, the NSS unit of this institution identified this place and encouraged the people to make it into an open defecation free village.

The NSSvolunteers of this college actively took part in the campaign and imparted knowledge on the status of open defecation in India and stressed need for avoiding open defecation. The NSS volunteers also performed a skit at the local middle school to insist the student minds to refrain from open defecation. Mr. C. Ponvelraj, Sanitary Supervisor, KayalpattinamMunicipality explained the status on availability of toilets in the village and explained the assistance available from the government in constructing new toilets at homes. Mrs.Poongothai, Headmistress of PU Middle School, Kombuthurai spoke on the occasion and lauded the student community for their support in implementing such good habits. A rally was also arranged through the streets of this village and distributed pamphlets to all people stressing the need for having toilets at homes. 110 school students and villagersen masse were benefited out of the programme. Mr.M.Muruganantham, NSS Programme Officer co-ordinated the event.