info@tnfu.ac.in    04365 - 241444
"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

நாகப்பட்டினம் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான மீன்வளப் பொறியியல் கல்லூரியில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா

நாகப்பட்டினம் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகமானது மறைந்த தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களால் கடந்த 2012ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான மீன்வளப் பொறியியல் கல்லூரிக்கு நாகை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் 2015ல் அடிக்கல் நாட்டப்பட்டது. சுமார் 8.5 கோடியில் இக்கல்லூரியின் கீழ் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதி  (210 இலட்சம்), மாணவியர் விடுதி (210 இலட்சம்), ஆசிரியர் குடியிருப்பு (100 இலட்சம்), நிர்வாக அலுவலர் குடியிருப்பு (125 இலட்சம்), இயந்திரவியல் பணிமனை  (50 இலட்சம்), பொதுவியல் பணிமனை (50 இலட்சம்), மற்றும் ஆய்வக கட்டிடம் ( 188 இலட்சம்) ஆகியவை கட்டப்பட்டுள்ளன. புதியதாக கட்டப்பட்டுள்ள இக்கட்டிடங்களை மீன்வளம், நிதி, மற்றும் பணியாளர் சீர்திருத்தத்துறையமைச்சர் மாண்புமிகு D. ஜெயக்குமார் அவர்கள், கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் மாண்புமிகு  ஓ.எஸ். மணியன் அவர்களின் முன்னிலையில், நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.சீ.சுரேஷ்குமார் அவர்களின் தலைமையில் திறந்து வைத்தார். அப்பொழுது தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர்.சுக.பெலிக்ஸ், முனைவர்.கு.ரத்னகுமார், பதிவாளர் (பொறுப்பு), மீன்வளப் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர்.சி.பாலசுப்ரமணியன், பல்கலைக்கழக அலுவலர்கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.