info@tnfu.ac.in    04365 - 241444
"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

02.08.2017 - நீர்வாழ் உயிரின வளர்ப்புத் தரச் சோதனை ஆய்வகம் திறப்பு விழா மற்றும் இறால் பண்ணையாளர்களுக்கான பயிற்சி முகாம்

நாகப்பட்டினம் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான  மீன்வளப் பொறியியல் கல்லூரியில் இறால் மற்றும் மீன்வளப்புப் பண்ணையாளர்களுக்கு பயன்படும் வகையில் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு நீரிவாழ் உயிரின வளப்புத் தரச் சோதனை ஆய்வகத்தை  02.08.2017 அன்று பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர்.சுக.பெலிக்ஸ் அவர்கள் துவங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது மீனவர்கள் மற்றும் மீன் பண்ணையாளர்களின் வாழ்க்கைத்தரத்தை அறிவியல் மற்றும் தொழிநுட்பத்தின் உதவியுடன் மேம்படுத்துவதில் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பங்கினை எடுத்துரைத்தார். மீன்வளப் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர்.சி.பாலசுப்ரமணியன் அவர்கள் வரவேற்புரை வழங்கி இந்த நீர் தரச் சோதனை ஆய்வகத்தின் பயன்பாடுகளைப் பற்றி எடுத்துரைத்தார். உதவிப் பேராசிரியர் மற்றும் ஆய்வக பொறுப்பாளர் திரு.தெ.ஆனந்த் அவர்கள் நன்றியுரை வழங்கினார். சுமார் 30 இறால் வளர்ப்பு பண்ணையாளர்கள் கலந்து கொண்ட  இவ்விழாவில் முன்னதாக காரைக்காலைச் சேர்ந்த வேளாண் தொழிநுட்ப மேலாண்மை முகமையுடன் இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த மீன்வளப் பொறியியல் கல்லூரி, தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர்கள் திரு.தெ.ஆனந்த் மற்றும் முனைவர்.தே.கேசவன் அவர்கள் மீன்வளர்ப்பில் நீர் தர மேலாண்மை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றி பயிற்சி அளித்தனர்.