info@tnfu.ac.in    04365 - 241444
"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Fisheries College and Research Institute, Thoothukudi won Best Chapter Award in the Agricultural Scientific Tamil Society Conference in Coimbatore

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு விருது

புதுதில்லியை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் வேளாண் அறிவியல் தமிழ் இயக்கம் தமிழகத்தின் முன்னோடி பல்கலைக்கழகங்களான தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மூன்றாம் வேளாண் ஆராய்ச்சி மாநாட்டை கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 12.08.2017 மற்றும் 13.08.2017 ஆகிய தேதிகளில் நடத்தியது. வேளாண் அறிவியல் தமிழ் இயக்கத்தின் கீழ் மேற்கூறிய மூன்று பல்கலைக்கழகங்களில் மொத்தம் 16 கிளையகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இயங்கி வரும் கிளையகத்தின் பங்களிப்பைப் பாராட்டி சிறந்த கிளையக விருது வழங்கப்பட்டது. இந்த விருதானது வேளாண் ஆராய்ச்சியில் தமிழ் ஆராய்ச்சி கட்டுரைகளுக்காகவும், 6000 க்கும் மேற்பட்ட வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வார்த்தைகளை தமிழில் மொழிபெயர்த்து சென்னையில் உள்ள தமிழ் வெர்சுவல் அகடமியின் உதவியுடன் தமிழ் வீக்கிபிடியா இணையத்தில் பதிவேற்றம் செய்தமைக்காகவும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ராமசாமி அவர்களிடமிருந்து தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியின் முதல்வர் முனைவர் கோ.சுகுமார் தலைமையின் கீழ் இயங்கி வரும் கிளையின் அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர்.


Fisheries College and Research Institute, Thoothukudi won Best Chapter Award in the Agricultural Scientific Tamil Society Conference in Coimbatore

The 3rd National Agricultural Scientific Tamil Research Conference of Agricultural Scientific Tamil Society, New Delhi jointly organized by Tamil Nadu Agricultural University, Tamil Nadu Veterinary and Animal Sciences University and Tamil Nadu Fisheries University was conducted on 12 – 13 August, 2017 at Tamil Nadu Agricultural University, Coimbatore. Sixteen chapters are functioning under these Universities. Among these, the Fisheries College and Research Institute, Thoothukudi Chapter was selected as the Best Chapter and Awarded (Best Chapter Award). The award was instituted for having performed with excellence in promoting the scientific research in Tamil and also for contributing to over 6000 scientific and technical words in Tamil with the assistance of Tamil Nadu Virtual Academy, Chennai for uploading at the Tamil Wikipedia. This award was presented at the inaugural function of the conference by the Dr.K.Ramasamy, Vice-Chancellor, Tamil Nadu Agricultural University, Coimbatore. The award was received by the Office bearers of Thoothukudi Chapter lead by Dr.G.Sugumar, Dean, Fisheries College and Research Institute, Thoothukudi.