info@tnfu.ac.in    04365 - 241444
"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

Faculty Development Programme organized for Tamil Nadu Fisheries University staff at Fisheries College and Research Institute, Thoothukudi

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களுக்கான இரண்டு நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 17 மற்றும் 18 ஆகிய தினங்களில்  நடைபெற்றது. இந்த பயிற்சியினை சென்னையில் உள்ள தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கல்விக்கழகம் ஒருங்கிணைத்து நடத்தியது. இந்த பயிற்சியில் 8 பேராசிரியர்கள் உட்பட 27 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த பயிற்சியின் முதல் நாளில் தலைமைத்துவம், குழு அமைத்தல் மற்றும் முதிர்ந்த அனுபவம் போன்ற தேவைகளுக்கான பயிற்சிகள் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களுக்கு நடத்தப்பட்டது. இரண்டாவது நாள் பயிற்சியில் திறம்பட குறிக்கோள்களை அடைதல், வெற்றிக்கான வழிவகைகள், ஆசிரியர்களுக்கான பயிற்றுவிக்கும் முறைகள் மற்றும் சிறந்த பேச்சாற்றல் மூலம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. தமிழ்நாடு மீன்வளப்பல்கலைக்கழகத்தால் தொடர்ந்து நடத்தி வரும் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாடு பயிற்சிகளின் ஒரு பகுதியாக இந்த திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்தப்பட்டது. இந்த பயிற்சியின் பயிற்றுனர்களாக திரு.லைம் கணேஷ் மற்றும் திரு.அங்கப்பன் ஆகியோர்கள் செயலாற்றினர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் முனைவர் கோ.சுகுமார் அவர்கள் பயிற்சியின் துவக்க விழாவில் அறிமுக கருத்துரை வழங்கியும், நிறைவில் பயிற்சியாளா;கள் அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினார். மீன்வள விரிவாக்கத்துறையின் பேராசிரியர் முனைவர் க. வீரபத்திரன் அவர்களின் உதவியுடன் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கல்விக்கழகத்தின் இயக்குநர் முனைவர் செந்திலாதிபன் அவர்கள் இப்பயிற்சியினை ஒருக்கிணைத்து நடத்தினார்.


Faculty Development Programme organized for Tamil Nadu Fisheries University staff at Fisheries College and Research Institute, Thoothukudi 

A two day Faculty Development Training Programme for the teaching staff of the Tamil Nadu Fisheries University was held at Fisheries College and Research Institute, Thoothukudi on 17 – 18 August, 2017. The programme was organized by Tamil Nadu Fisheries University Academy, Chennai. A total of 27 faculty staff including 8 Professors attended the programme. On the first day, interactive sessions on Leadership, Team building and Emotional maturity mainly focusing the needs of the senior level staff were conducted. On the second day, the training programme focused on Performance excellence through goal setting, Success – a winning strategy, Teacher, Teaching methodologies and Transfer of knowledge through effective communicative skills were organized. Faculty training programmes are part of the series of training programmes organised by the Tamil Nadu Fisheries University for continuous improvement in the attitude and skills of all its faculty staff.   Shri. Lime Ganesh and Shri. Angappan served as resource persons. Dr.G.Sugumar, Dean, Fisheries College and Research Institute, Thoothukudi made opening remarks on the inauguration and distributed certificates on the concluding day. Dr.R.Senthiladeban, Director, Tamil Nadu Fisheries University Academy, Chennai coordinated the entire programme with the assistance of Dr.K.Veerabhadran, Professor, Department of Fisheries Extension, Fisheries College and Research Institute, Thoothukudi.