info@tnfu.ac.in    04365 - 241444
"Harnessing the Science of Fisheries for Food, Nutrition and Livelihood"

19.06.2017 - தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக நிறுவன நாள் கொண்டாட்டம்

    19.06.2017 - தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக நிறுவன நாள் கொண்டாட்டம் - மீன்வளப் பொறியியல் கல்லூரியில் சிறப்பு நிகழ்ச்சிகள் - தொழிற்நுட்ப வெளியீடு, இறால் பண்ணையாளர்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்க்கு கண்காட்சி

நாகப்பட்டினம் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் நிறுவன நாளான ஜூன் 19ம் தேதி அன்று இறால் பண்ணையாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மீன்வளப் பொறியியல் கல்லூரியில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இவ்விழாவினை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர்.எஸ்.பெலிக்ஸ் அவர்கள் துவங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது மீனவர்கள் மற்றும் மீன் பண்ணையாளர்களின் வாழ்க்கைத்தரத்தை அறிவியல் மற்றும் தொழிநுட்பத்தின் உதவியுடன் மேம்படுத்துவதில் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பங்கினை எடுத்துரைத்தார். உலக அளவில் மீன்வள அறிவியல், பொறியியல், மற்றும் தொழில்நுட்பங்களில் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் முன்னோடியாக திகழ்வதற்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கினையும் அதற்க்கான எதிர்கால திட்டங்களைப் பற்றியும் எடுத்துரைத்தார். மேலும்  மீன்வளப் பொறியியல் கல்லூரியில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட,  இறால் பண்ணையாளர்களுக்கு சிறப்பாக பயன்படக்கூடிய,  கார அமிலத்தன்மையை கணக்கிடும் கைபேசி செயலி மற்றும் TAN கணக்கிடும் கைபேசி செயலிகலையும், அலங்கார மீன்வளர்ப்பு மற்றும் இறால் வளர்ப்பு குறித்த புத்தகங்களையும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அவர்கள் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர்.கு.ரத்னகுமார், ஆராய்ச்சி இயக்குனர் முனைவர்.ஜெயசேகரன், தேர்வு கண்காணிப்பாளர் முனைவர்.சண்முகம், மற்றும் மீன்வளப் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர்.சி.பாலசுப்ரமணியன் அவர்களின் முன்னிலையில் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து இறால் பண்ணையாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கானது,  "வனாமி இறால் வளர்ப்பு மற்றும் மேலாண்மையில் உயரிய தொழில்நுட்பங்கள் மற்றும் நோய் மேலாண்மை" என்ற தலைப்பில் நடைபெற்றது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான "அலங்கார மீன்கள்" பற்றிய கண்காட்சியும், மீன்வள அறிவியல் மற்றும் தொழிநுட்பங்களை விளக்கும் சுவரொட்டி விளக்கப் படங்களும் ஏற்பாடு செய்யப்பட்டன. இவ்விழாவில் 200க்கும் மேற்பட்ட இறால் பண்ணையாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் அனைவர்க்கும் மதிய உணவானது மீன்வளப் பொறியியல் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

     இவ்விழாவில் முன்னதாக மீன்வளப் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர்.சி.பாலசுப்ரமணியன் அவர்கள் வரவேற்புரை வழங்கி சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார். திரு.தெ.ஆனந்த் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இவ்விழாவானது தமிழக அரசின் திட்ட அமைப்புத் துறை மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் நிதி உதவியுடன் நடத்தப்பெற்றதாக விழாவிற்கு ஏற்பாடு செய்த திரு.தெ.ஆனந்த், சு.மணிகண்டன், மற்றும் தே.கேசவன் அவர்கள் கூறினர்.

Tamil Nadu Fisheries University Foundation Day Celebration 2017

In view of celebration of ‘Foundation Day’ of Tamil Nadu Fisheries University on 19.06.2017, special events at College of Fisheries Engineering, Tamil Nadu Fisheries University, Nagapattinam. The programme was inaugurated by the Vice-Chancellor of the University, Dr.S.Felix. In his prelude, the Vice-Chancellor emphasized the role and responsibility of the University in elevating the life and economy of fisher folks and shrimp farmers. Further, he elaborated the role of fisheries science and engineering students and faculties and strategies in bringing this University to be a global leader in Aquaculture and Fisheries research and education. 

On this special day, the Vice-Chancellor released mobile apps for pH calculation and TAN calculation which are indigenously prepared by College of Fisheries Engineering for the benefit of the farmers.  In addition, new books on better management practices in shrimp farming and ornamental fish a profile were also released. An “Awareness Programme on Advances in Shrimp Culture and Management Practices” for shrimp farmers in Nagapattinam, Thiruvarur and Thanjavur districts was also arranged. The presentations also included ‘Exhibition of Ornamental Fishes’ and educational posters on fisheries science, engineering, and technology. This programme had coverage on freshwater aquarium, biodiversity, habitats, etc. More than 200 farmers and students benefitted from this event.

Dr.S.Balasubramanian welcomed the gathering and presented mementos to the special guests, Dr.K.Rathnakumar, Registrar, Dr.G.Jeyasekaran, Director of Research, and Dr.S.A.Shanmugam, Controller of Examinations. In addition to the special events, lunch was also arranged for the visitors. The co-ordinators of this event, Mr.T.Anand, S.Monikandon, and D.Kesavan emphasized that the event was sponsored by the research and development projects funded under Tamil Nadu Innovative Initiative and National Agricultural Development Programme.